மாதவனுடன் இணையும் விஜய்சேதுபதி !

ஆர்யா நடித்த ‘ஓரம் போ’, மிர்ச்சி சிவா ‘வா’ என்கிற குவார்ட்டர் கட்டிங் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இயக்கும் மூன்றாவது படத்தில் மாவதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

vijay-sethu-pathy-mathavan

‘இறுதிச்சுற்று’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் தமிழில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது குருநாதர் மணிரத்னம் கூறி இருந்தார். அதன்படி தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் மாதவன். அதை தெரிந்து கொண்டு புஷ்கர் – காயத்ரி இருவரும் மாதவனிடம் ஒரு கதையைச் சொல்லி ஓகே பண்ணிவிட்டனர்.

புஷ்கர் – காயத்ரி இயக்கும் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என்று பெயரிட்டிருக்கிறார்கள் இப்படத்தை ‘இறுதிச்சுற்று’ படத்தை தயாரித்த ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இரண்டு கதாநாயகர்களை கொண்ட ரொமாண்டிக் த்ரில்லர் கதையாம் இப்படம்!

இரண்டு ஹீரோக்கள் என்றால்… இன்னொருவர் யார்? இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே எட்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தையும் சேர்த்தால் ஒன்பது படம். ஒரு வருடத்தில் ஒரு ஹீரோ நடித்து ஒன்பது படங்கள் வெளியானால் அந்தக்காலத்தில் விஜயன் செய்த சாதனைக்கு நிகரானது.

Related Posts