மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் நேற்று முன்தினம் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
நல்லூர் றௌட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் சென்னை போர்ட் சிற்றி றௌட்டறிக் கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் நல்லூர் றௌட்டறிக் கழகத் தலைவர் றௌட்டேறியன் த.ரவினதாஸ் தூதரக அதிகாரிகள் கே.எஸ். மார்வா மற்றும் வி. இராஜகோபால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்திய பிரதித்துணைத்தூதுவருடன் இணைந்து மாணவர்களுக்கான காலணிகளை வழங்கினர்.
மேலும் இந்திய பிரதித் துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தி அவர்களினால் பாடசாலை நூலகத்திற்கான நூல்களும் பாடசாலை அதிபர் சிவனேசனிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் இப் பாடசாலைக்கு விஜயம் செய்த இந்திய பிரதித்துணைத்தூதுவர் சு.தட்சணாமூர்த்தி பாடசாலை புத்தகப் பைகளும் காகிதாதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.