Ad Widget

மாதகல் கடற்பரப்பில் 52 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பு ஊடாக கடத்தபட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி வந்த சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் மாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக இளவாளை பொலிஸாருக்கு இரகசிய தகவலைன்று கிடைத்துள்ளது.



இதனையடுத்து காங்கேசன்துறை விஷேட பொலிஸ் குழு கடற்படையினரது உதவியுடன் விசாரனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்தநிலையில் மாதகல் கடல்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்திருந்த படகொன்றை சோதனையிட்டபோதே கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் கேரள கஞ்சா பரல்களில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொண்டு வரப்பட்டிருந்ததாகவும், கைப்பற்ப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 52கிலோ எனவும் இவற்றின் மொத்த பெறுமதி 91இலட்சம் இலங்கை ரூபா எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Related Posts