மாதகல் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத முருகைக் கற்கள் அகழ்வு!- இருவர் கைது

arrest_1மாதகல் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் முருகை கற்களை அகழ்ந்து, ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களின் ஓட்டுனர்களை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாதகல், பண்டத்தரிப்பு பகுதிகளில் வைத்தே குறித்த உழவு இயந்திரங்கள் பிடிக்கப்பட்டதாகவும் இதன்போது வாகனத்தை செலுத்தி வந்தவரிடம் உரிய வாகன அனுமதிப் பத்திரம் இல்லாமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாதகல் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோத முருகைக்கற்கள் அகழ்ந்தெடுப்பால் பாரியளவில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பொலிஸார், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்ததாக மேலும் தெரிவித்தனர்.

Related Posts