மாணவி துஷ்பிரயோகம்; தந்தை கைது

கொடிகாமம் தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வருவதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சிறுமியின் தாய் கடந்த வருடம், கணவனை பிரிந்துச் சென்ற நிலையில், தந்தையுடனும் உறவினர்களுடனும் சிறுமி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கல்வி நடவடிக்கைக்காக குறித்த சிறுமியை பெண்கள் விடுதியில் அண்மையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

அதன்போது, தனக்கு நடந்த கொடுமையை விடுதியில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, விடுதி பொறுப்பாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts