மாணவி துஷ்பிரயோகம் : அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

தென்மராட்சி – வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும், கொடிகாமம் பொலிஸாரும் இணைந்து விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணையை அடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த சந்தேகத்தின்பேரில் ஆசிரியர் ஒருவர் மற்றும் அதனை மறைத்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் உட்பட ஜவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் அவரது வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது சந்தேக நபர்கள் ஜவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts