பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியளவில் அகுருஸ்ஸ – எல்லவெல பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர், ரியூசன் வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, கணித பாடம் கற்பிக்கும் ரியூசன் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குற்றவாளி 65 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.