மாணவியை சேஷ்டை செய்த சிங்கள இளைஞர்கள்!- தட்டிக்கேட்டவர்களை அடித்து விரட்டிய பொலிஸ்

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவரை பின் தொடர்ந்து சைக்கிளில் வந்த வீதி வேலை செய்யும் சிங்கள இளைஞர்கள் இருவர், மாணவியின் சட்டையின் மேல் பகுதிக்குள்ளே கடதாசித் துண்டொன்றில் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதி போட்டுள்ளனர்.

இதனைத் தொலைவில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளான சில தமிழ் இளைஞர்கள், குறித்த சிங்கள இளைஞர்களை அதட்டி விசாரித்துள்ளனர்.

இச்சம்பவங்களையெல்லாம் சற்றுத் தொலைவில் அவதானித்துக் கொண்டிருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய வீதிப் பொலிஸார் ஒருவர், அவ்விடத்தில் வந்து பிரச்சினையை விசாரித்துள்ளார்.

பிரச்சினையை அறிந்து கொண்டதும் இது மகிந்தவின் ஆட்சி, பிரபாகரனின் ஆட்சி இல்லையென்று தெரிவித்து, தமிழ் இளைஞர்களை அடித்ததுடன், அதட்டி விரட்டியுள்ளார்.

Related Posts