மாணவியைக் கடத்த முற்பட்ட இளைஞர்கள் கைது!

வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த தாயார் சிகிச்சைக்காக, ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts