மாணவியுடன் தகாத முறையில் செயற்பட்ட இராணுவ அதிகாரி: மடக்கி பிடித்த பொதுமக்கள்

வவுனியா பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவருடன் தகாத முறையில் செயற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இருப்பினும் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிக்க விட்டதாக தெரிவித்து, பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சம்பவமானது நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts