மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டிய அரச பேரூந்து சாரதி

இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

குறித்த மாணவி தனது பயணத்தை தொடர்வதற்காக நடத்துனரிடம் 8 ரூபாய் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு சிறிது தூரத்தில் இறங்கிய நிலையில், ஆத்திரமடைந்த பேரூந்தின் சாரதி மாணவியை திட்டடியுள்ளார்.

எனவே குறித்த சாரதி மாணவியுடன் நடந்து கொண்டவிதம் மற்றும் ஏனைய மாணவிகளை தகாத வார்த்தைகளினால் திட்டியமை போன்ற செயற்பாடுகளை பேரூந்தில் பயணித்த பயணிகள் கண்டித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த சாரதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வவுனியா சாலை முகாமையாளர் மற்றும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட மாகாண முகாமையாளர் ஆகியோர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேரூந்தில் கிளிநொச்சி செல்லும் அலுவலர்கள் பருவகால சீட்டுடன் ஏறினால் தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசப்படுவதோடு இறங்கி நின்று அனைவரும் ஏறிய பின் ஏறுமாறு பணிக்கப்படுகிறது.

அலுவலக நாட்களில் காலை 7.15 ற்கு புறப்படும் பஸ்ஸில் பெண் அலுவலர்களுடன் தான் அதிகமாக இவ்வாறு இடம் பெற்று வருகின்றது .கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவித்தும் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது

Related Posts