மாணவிகளுடன் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்த ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

pareya-pulam-school

பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் மற்றுமொரு ஆசிரியரை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.

குறித்த ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியையும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Related Posts