மாணவர் போராட்டம் தோல்வியிலேயே முடியும் என்கிறார் துணைவேந்தர்!

நிர்வாகத்தை முடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தவறானது. இப்போராட்டம் தோல்வியிலேயே முடியும் என யாழ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்க இயலாது.

நிர்வாக முடக்கல் எதிரொலியாக 3 பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறிய பின்னர் 10 மாணவர்கள்தான் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள்.
இதன் மூலம் மாணவர்கள் மேற்கொண்டிருக்கும் கதவடைப்புப் போராட்டம் நிச்சயமாகத் தோல்வியிலேயே முடியும் என அவர் கூறியுள்ளார்.

Related Posts