மாணவர் படுகொலை ; கிளிநொச்சியில் பேரணி , கிழக்குப் பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களது மரணத்திற்கு நீதி கோரியும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .

kili

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த பேரணி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.

பொலிஸ் அராஜகம் ஒழிக வேண்டும் வேண்டும், நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் இடம்பெற்ற பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து மேலதிக அரசாங்க அதிபர் சத்திய சீலனிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச்சமூத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களது கொலைக்கு நீதி கோரி பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

batti

Related Posts