மாணவர்கள் கொலை: விசாரணைகள் பற்றிய தகவல்களை வெளியிடத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக சிறீலங்காக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விசாரணையை முன்னெடுக்க விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விசாரணை தொடர்பான எந்தத் தகவலையும் ஊடகங்களுக்கு வழங்கவேண்டாமென சிறீலங்கா காவல்துறை திணைக்களம் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை, சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகன ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts