மாணவர்கள் குடைபிடித்துக் கொண்டு பரீட்சை எழுதும் நிலை!

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் தொடர்ந்தது. நேற்றுக் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது பெய்துவரும் கடுமையான மழையினால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

நேற்று முல்லைத்தீவு இரணைப்பாலை பாடசாலையில் மாணவர்கள் குடைபிடித்துக் கொண்டு பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டது.

malai-exam-rain-4

malai-exam-rain-3

malai-exam-rain-2

malai-exam-rain-1

Related Posts