மாணவர்களுக்கு ஓகஸ்ட், டிசம்பர் தவணை விடுமுறைகள் இல்லை

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts