மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் நான்கு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா பரவல் அச்சம் காரமணாக மேலதிக விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

இதன்போது 200 மாணவர்களுக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் 200 மாணவர்களை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு கற்பித்தல் காலம் தொடர்பில் புதிய அறிவுருத்தல் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் அச்சம் குறைவடைந்துள்ளதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts