மாணவர்களுக்காக பௌத்த குருமார்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனை

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

Related Posts