பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த வாரம் தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் மாணவர்கள் பலர் பொலிஸாரினால் தடியடி மூலம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் பாரிய பேரணியொன்றை நடத்த திட்டமிட்டதோடு, சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் வரை ஒன்று திரட்டனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கங்கொடவில நீதிமன்றத்திடம் மிரிஹானை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அதற்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.