யாழ்ப்பாணம் தேசியற் கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி ஓய்வு பெற்றுச் செல்வதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பெரும் எடுப்பில் மணிவிழாவினைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகின்றது.
அவரின் ஓய்விற்கு நினைவுப் பரிசாக கார் ஒன்றினை வழங்கவதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக மாணவர்களிடம் தலா 1000 ரூபா வீதம் பணம் பெறப்பட்டு வருகின்றது.
அத்துடன் வெளிமாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருக்கும் மாணவர்களிடமும் கட்டாயப்படுத்தி பணம் பெறப்படுகின்றது.
அதுபோல கல்வியை முடித்து வெளியேறியவர்களிடமும் 3000 தொடக்கம் 5000 ஆயிரம் ரூபா வரையில் பெறப்பட்டு வருகின்றது. பணம் பெற்றுக் கொண்டு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.
இது குறித்து கல்வியலாளர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.