மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு ஆளுநர் அறிவுரை

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையினை நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேனை, வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் காரியாலையத்தில் சந்தித்து உரையாடியிருந்தார்.

அச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தவராசா ஆளுநருடைய அறிவுறுத்தல் தொடர்பில் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தவராசா மேலும் தெரிவிக்கையில்:-

கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொலிஸார் குறித்த சம்பவ விசாரணையில் காட்டும் அசமந்த போக்கு தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் ஆளுநர் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்று தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts