மாணவன் சுலக்ஷனின் நினைவாக சுன்னாகத்தில் பேரூந்து தரிப்பிடம்

அண்மையில் யாழில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்ஷனின் நினைவாக, பேரூந்து தரிப்பிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று (புதன்கிழமை) நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைக்கப்படவுள்ள குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில், வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் பிரகாஸ், வலிதெற்கு பிரதேச சபை செயலாளர், சுலக்ஷனின் குடும்பத்தார், அவரது உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts