மாணவனின் மரணம் வீணாக மாறிவிடக்கூடாது! – முதலமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் மாணவனின் மரணம் வீணாக மாறிவிடக்கூடாது எனவும், இந்த அரசாங்கம் வித்தியாசமான சிந்தனையுடன் செயற்பட்டு சகல அரசியல் கைதிகளையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பு என்றார்.

Related Posts