மாணவனின் சாவிற்காக கைதிகளை விடுவிக்க முடியாது

மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவையில்லை என பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.கொக்குவில் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இத தொடர்பில் உங்கள் கருத்து என்னவெனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,

இது தொடர்பில் தனக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு நடந்திருப்பின் அவரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் வடக்கு கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நாட்டில் எந்தவொரு சட்டவிரோத நிகழ்வுகளையும் அனுமதிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வாறு முன்னெடுக்கப்படும் பட்டசத்தில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts