மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்பதால் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவு!!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், தானும், தன்னுடைய 14 வயது உறவுக்கார சிறுமியும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தன்னுடைய இரு உறவினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்கள் என குற்றஞ்சாட்டி தாக்குதல்தாரர்கள் இந்த வன்முறையை தொடுத்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தின் மேவத்தில், இருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இது குறித்த குற்றச்சாட்டை கூறியுள்ள பெண்ணும், 14 வயதுடைய ஒரு சிறுமியும் மோவத்தில் உள்ள அவர்களது வீட்டில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த குடும்பத்தினர் மாட்டிறைச்சி உண்ணவில்லை என மறுத்துள்ளனர்.

இந்து சமூகத்தில் பசுக்கள் புனிதமாக கருதப்படுகின்றன.

மேலும், இஸ்லாமியர்கள் பசுவை கொல்கிறார்கள் அல்லது மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் இரு சமூகங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்ற நிலைக்குக் காரணமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவாரங்களுக்குமுன், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால், தற்போதுதான் அந்த பெண் இப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Related Posts