மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி உயிரிழந்துள்ளார்.

புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சங்கர் (வயது 51), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயசீலி.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் ஒரு கட்டிடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாடிப்படியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சங்கர் கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அவர் அலறி துடித்தார். இந்த சத்தத்தை கேட்டு மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து, காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சங்கர் பரிதாபமாக இறந்தார் என தமிழக ஊடகமான தினத் தந்தி செய்தி வௌியிட்டுள்ளது.

அவரது உடலை கண்டு ஜெயசீலி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts