மாடல் அழகி பிரியங்கா தற்கொலை!

டெல்லியில் திருமணமான ஒரே மாதத்தில் மாடல் அழகி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

priyanka

தெற்கு டெல்லியை சேர்ந்தவர் பிரியங்கா கபூர் (25). மாடல் அழகி. அவருக்கும் தொழில் அதிபர் நிதின் சாவ்லாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. நிதின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரியங்காவை சந்தித்தபோது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை பிரியங்காவின் தாயும், நிதினும் அவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியங்கா தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து பிரியங்காவின் சகோதரி டிம்பி கூறுகையில், நிதின் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்தார் என்றார். பிரியங்காவின் உடலுக்கு அருகில் இருந்த 2 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Posts