மாங்குளம் அருகே மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை அகற்றும் பணிகள் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts