மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை!!!

முல்லைத்தீவு மாங்குளத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளியே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காணிப் பிரச்சினை காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் இடம்பெற்றது.

கிளிநொச்சியைச் உதய நகரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பாலகுமார் ஜெகதீஸ்வரன் (வயது-43) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுவதனால் மேலதிக விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Posts