மாகாண சபை தேர்தலை நடத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பிலேயே அடுத்த எமது நடவடிக்கைகள் காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டில் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் தேர்தல் ஆணைக்குழுக்களுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டு, அவ்விடயத்தில் காணப்படுகின்ற குறை நிறைகளை ஆராய்ந்து விரைவாக தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை வடக்கு மக்களுக்கு வேண்டிய வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு வேண்டிய நிதி போதியளவு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் இதுவரைகாலமும் பேச்சுவார்த்தை மாத்திரமே இடம்பெற்றுள்ளது” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts