மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன் போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்,
அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை தொகுதி மற்றும் விகிதாசார முறையில் நடத்துவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் பஷில் ராஜபக்ஸ இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.