மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை நேற்றுச் சூழ்ந்துகொண்ட படையினர்!

கடும் மழைகாரணமாக வடமராட்சி,கரவெட்டி பிரதேச செயலகபிரிவில் மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது.

karaveddy-sugirthan

karaveddy-sugirthan-2

இவ்வாறு ராஜகிரமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.

இதனையறிந்த இராணுவத்தினர் உறுப்பினர் சுகிர்தனைச் சூழ்ந்துகொண்டனர். எதற்காக மக்களுக்கு உணவு வழங்குகிறீர்கள் என்று மாகாண சபை உறுப்பினரிடம் விசாரணையும் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts