இலங்கையின் புதிய பிரதமர், ரனில் விக்ரமசிங்க, அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.
சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விரிசல் சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப்போராக வழிவகுத்ததற்கு ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வாக அவர் தமிழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.
அதிகாரத்தை பரவலாக்கும் 13வது அரசியல் சட்டத்திருத்தம் பல ஆண்டுகளாக சட்டப்புத்தகத்தில் இருந்தும் முந்தைய மஹிந்த ராஜபக்ஷ அரசால் அது முடக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
புதிய அரசு, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது உள்ளிட்ட மற்ற பல விஷயங்களிலும் முக்கிய அரசியல் சட்ட மாற்றங்களை ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் கொண்டுவரப் போவதாக உறுதியளித்திருக்கிறது.