பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் குறித்த விசாரணை முடியும் வரை இவர்கள் எவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.- எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.