சபுகஸ்கந்தை – மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
68,000 சுவர்க் கடிகாரங்கள் மற்றும் தேர்தல் போஸ்டர்கள் ஒருதொகையும் அங்கிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட களஞ்சியசாலையானது, துறைமுக அதிகார சபையால், 15 இலட்சம் ரூபாவுக்கு வாடகைக்குப் பெறப்பட்டது என அதன் உரிமையாளர் பொலிஸில் முறையிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.