மஹிந்த, கோட்டா யாழ் வருகை!!ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பு!!

பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவும் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா்.

இதற்காக யாழ்.நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும் உச்ச பாதுகாப்பை வழங்கியிருக்கின்றனா்.

மேலும் ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல் வீதிகள் மூடப்பட்டு உச்ச பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

Related Posts