மஹிந்த, கெஹலியவிடம் இன்று மீண்டும் விசாரணை!

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் தனது விசாரணைகளை இன்றும், நாளையும் மேற்கொள்ளவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட விளம்பரங்களுக்கு 4 கோடி ரூபா ரூபா மாத்திரமே செலுத்தியுள்ளார். இதன் காரணமாக 11 கோடியே 50 இலட்சம் ரூபா சுயாதீன தொலைக்காட்சிக்கு நட்டம் ஏற்பட்டது என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மோசடி தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடமும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடமும் பாரிய நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இவர்கள் ஆணைக்குழு முன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts