பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கு இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.