முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாதகல தோட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவு முறை சகோதரியான விசித்ரா ஷிலாதரி ராஜபக்ச பெயரில் விலைக்கு பெற்றுகொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் நிலப்பகுதி 400 ஏக்கராகும்.
இந்த தோட்டத்திற்கு செல்வதற்காக கொங்க்ரீடினால் நிர்மாணிக்கப்பட்ட பாதை இருந்த போதிலும் புதிய பாதை ஒன்று தெனியாய, நாதகல தோட்ட மாளிகைக்கு செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் மாளிகை நிர்மாணிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்ற சந்தர்ப்பத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பம் வரையில் நிலக்கீழ் மாளிகையின் இரண்டு மாடிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது.
4 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் அதி நவீன தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் செய்துள்ள நிலையில் , இந்த நிலக்கீழ் மாளிகையின் கடைசி பகுதியில் ஆடம்பர வீடொன்றிற்கான சுரங்கப்பாதைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 180 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த மேசன்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து வசதிகளையும் கொண்ட மாளிகையில் மேலதிகமான ஹெலிகாப்டர் இறங்கும் முற்றம் நிர்மாணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த நிர்மாணிப்பு தொடர்பில் 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் இறங்கும் முற்றத்தை தவிர ஏனைய அனைத்து பிற கட்டுமான செயல்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.