மழை வெள்ளத்தால் ரஜினி பிறந்தநாள் விழா ரத்து?

நடிகர் ரஜினிக்கு வருகிற 12–ந்தேதி 65–வது பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்த நாளை அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மக்கள் கடும் பாதிப்பில் இருக்கும் நிலையில் பிறந்த நாளை கொண்டாட ரஜினி விரும்பவில்லை.

எனவே ரஜினி பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. பிறந்தநாள் அன்று ரஜினி கோவாவில் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

Related Posts