ஏப்ரல் 21ஆம் திகதிவரை மழை பெய்யாவிட்டால் நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சன் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே மாத இறுதியாகும்போது, கடும் வரட்சி நிலை ஏற்பட்டால் குடி நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.