மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய ஆகிய நான்கு மாகாணங்களில் இன்று(10) மாலை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களிலும் வானத்தில் மேகக் கூட்டம் நிறைந்து காணப்படும்.

சப்ரகமுவ, மத்திய, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, பதுளை, மட்டக்களப்பு,திருகோணமழை,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு 77 மில்லி மீற்றர் கடும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் பலத்த காற்று, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளமையால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts