நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து திணைக்களம் இன்று அதிகாலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் :
சில இடங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின்போது வலுவான காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.