முல்லைத்தீவு மல்லாவி நகரப்பகுதியில் பண்டாரவன்னியன் சிலை ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. எனினும் திறந்து வைக்கப்பட்ட சில வாரங்களிலேயே அச்சிலையின் ஒரு பக்க கை மற்றும் வாள் என்பன உடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிலையானது சேதமடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுவதுடன், இது மாவீரன் பண்டாரவன்னியனை கொச்சைப்டுத்தும் செயல் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழரின் வீரத்தை பறைசாற்றும் இச்சிலையினை மீள் நிர்மாணம் செய்ய வேண்டும் என மல்லாவி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு பெரியார்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.