மல்லாக இளைஞர் கொலை வழக்கு : பொலிஸாருக்கு நீதிவான் எச்சரிக்கை!!

மல்­லா­கத்­தில் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்ற பொலிஸ் நப­ரைத் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் கைது செய்­யாது தவிர்ப்­பது தொடர்­பா­கச் சுட்­டிக்­காட்டி விசா­ர­ணை­யில் திருப்­தி­யில்லை என்று எதி­ராளி தரப்பு வழக்­கு­ரை­ஞர்­கள் தெரிவித்­ததை அடுத்து உரி­ய­மு­றை­யில் விசா­ரிக்­கத் தவ­றி­னால் வேறு பொலிஸ் நிலை­யம் ஊடாக வழக்கை விசா­ரிப்­பது குறித்­துப் பரி­சீ­லிக்­க ­வேண்­டி­யி­ருக்­கும் என்று எச்­ச­ரித்­தார் மல்­லா­கம் மாவட்ட நீதி­வான் ஏ.அலெக்ஸ்­ராஜா.

மல்­லா­கத்­தில் கடந்த 17ஆம் திகதி இரவு இரு குழுக்கு இடை­யில் நடந்த மோதல் ஒன்­றின் இடையே இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்­றார் பொலிஸ் நபர். இது தொடர்­பான வழக்கு மல்­லா­கம் நீதி­மன்­றில் நடந்து வரு­கின்­றது.

இளை­ஞர் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அந்­தப் பகு­தி­யில் இடம்­பெற்ற மோத­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள், துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தின் பின்­னர் அந்­தப் பகு­தி­யில் இடம்­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தில் பங்­கு­கொண்­ட­வர்­கள் எனப் 12 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர். எனி­னும் முன் உத்­த­ரவு ஏது­மின்றி இளை­ஞ­னைச் சுட்­டுக்­கொன்ற பொலிஸ் நபர் இது­வ­ரை­யில் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

‘‘பொலிஸ் நபர் சுடு­வ­தற்கு முன்­னர் எது­வித எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. எடுத்த எடுப்­பி­லேயே சூடு நடத்­தி­யுள்­ள­னர். பொலி­ஸா­ரின் செயற்­பாடு மிரு­கத்­த­ன­மா­னது. கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அப்­பா­வி­கள். துப்­பாக்­கி­யால் சுட்ட பொலிஸ் நபர் இது­வ­ரை­யில் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் உரிய முறை­யில் விசா­ரணை தேவை’’ என்று எதி­ரா­ளி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­கள் மன்­றில் சுட்­டிக்­காட்­டி­னர்.

இதை­ய­டுத்தே துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் உரிய முறை­யில் விசா­ரணை நடத்­தப்­ப­டா­விட்­டால் வேறு பொலிஸ் நிலை­யம் ஊடாக விசா­ரணை நடத்­து­வது குறித்­துப் பரி­சீ­லனை செய்­ய­வேண்­டி­யி­ருக்­கும் என்று நீதி­வான் எச்­ச­ரித்­தார்.

கைதா­ன­வர்­க­ளது மறி­யல் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டது. கைதா­ன­வர்­க­ளில் ஒரு­வர் இன்­றைய தினம் பரீட்­சைக்­குத் தோற்­ற­வேண்­டி­யி­ருப்­ப­தால், அவ­ருக்­குத் தற்­கா­லி­கப் பிணை வழங்­கிய நீதி­மன்­றம், நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை அவர் மீண்­டும் சர­ண­டைய வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டது.

Related Posts