Ad Widget

மல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மையில் நேற்றிரவு 7 மணியளவில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்டோரைக் கைது செய்யுமாறும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மோதல் சம்பவங்களில் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சந்தேகநபர்கள் ஐவரும் நேற்று மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதுடன், 5 சந்தேகநபர்களும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் எனவும் பொது இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

அதனை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்கள் 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts