மல்லாகம் துப்பாக்கிச் சூடு- நீதிமன்றம், மருத்துவமனையில் குழப்பம்!!

மல்­லா­கத்­தில் இளை­ஞர் உயி­ரி­ழக்க கார­ண­மான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பொலிஸ் அதி­காரி இன்னமும் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு முன்பாக நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் என்ற இளைஞன் உயிரிழந்தான்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் நேற்றிரவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி நீதி­மன்­றில் இன்று முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று, வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னான்டோ தெரி­வித்­திருந்தார்.

எனினும் குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் இதுவரை முற்படுத்தப்படவில்லை. இதனால் குறித்த பகுதி மக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் சடலப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இளைஞனது உறவினர் கூடியுள்ளனர் எனத் தெரிவிக்கபடுகிறது.

Related Posts