மல்லாகம் துப்பாக்கிச்சூடு: ஐவர் கைது

மல்லாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தவே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்த போதும், பொலிஸார் திட்டமிட்டுச் சுட்டதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்தநிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தரப்பினர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பிலேயே குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Posts