மலையக மக்களின் நலன்களுக்காகவே கட்சித் தாவல் என்கிறார் ராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் நலன்கள், குறிப்பாக அவர்களின் வீடமைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை, அங்குள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலையில் கூடுதல் வாய்ப்புக்கள் போன்றவற்றில் உரிய கவனம் செலுத்தப்படும் எனும் உறுதிமொழி வங்கப்பட்டதாலேயே எதிரணி பக்கம் தாங்கள் சென்றதாகக் கூறினார் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

rathakirushnan

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் தோட்டஉட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தியிருந்தார் எனவும், அது மஹிந்த தலைமையிலான ஆட்சிகாலத்தி ஒழிக்கப்பட்டது என்று கூறும் அவர், எதிரணி தரப்பில் அந்த அமைச்சின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதாக கூறுகிறார்.

எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுடன் மலையக மக்களின் நலன்கள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் ஒரு உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் எனவும், அது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசில் துணை அமைச்சர்களாக இருந்த ராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் அரசிலிருந்து விலகி எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.

Related Posts